கன்னியாகுமரியில் 8 ஆம் வகுப்பு மாணவி பள்ளி அறையில் தற்கொலைக்கு முயற்சி!
kanniyakumari 8th student attempted suicide
கன்னியாகுமரி: கொட்டாரம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் மகாராஜபுரத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், மாணவி இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தவர். தீடீரென வகுப்பறையில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் உண்டு, மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்த சக மாணவ- மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறி, பின்னர் மாணவியை மீட்டு கொட்டாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு, மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். செய்தி அறிந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு முன்பு வந்து குவிந்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாணவி தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் என்ன என்றும், பள்ளியில் ஆசிரியர்களின் துன்புறுத்தல் காரணமாக இருக்குமா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
kanniyakumari 8th student attempted suicide