#குமரி : பெற்றோரை விரட்டிய மகன்.. சப் கலக்டர் செய்த தரமான சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியைச் சேர்ந்த ஒரு வயதான தம்பதி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

அவர்கள் கொடுத்த புகாரின் படி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில், முதல் மகன் உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது மகனுக்கு அவர்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.

தனது குடும்பத்துடன் செட்டில் ஆன அந்த இரண்டாவது மகன் பெற்றோரை கவனித்துக் கொள்ளாமல் வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதனை தொடர்ந்து, அவர்கள் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்ட தீர்ப்பாயத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இது குறித்த மனுவை பத்மநாபபுரம் சப் கலெக்டர் பரிசீலனை செய்துள்ளார். இதனை தொடர்ந்து, மகனுக்கு பெற்றோர் எழுதி வைத்த அனைத்து சொத்துக்களையும் ரத்து செய்தார். மேலும் அவர்களை தொந்தரவு செய்தால் மகன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanniyakumari parents complaints to Collector The action make shock To son


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->