கன்னியாகுமரி | சிவசேனா கட்சி தலைவர் வீட்டில் இருந்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார்!
Kanyakumari Police confiscated Ganesh idols Shiv Sena party leader house
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சிவசேனா இந்து மகா சபா புனித அமைப்புகள் சார்பில் இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு 5000கும் மேற்பட்ட சிலைகள் பொது இடங்கள் மற்றும் ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 22, 23 மற்றும் 24 போன்ற தேதிகளில் கன்னியாகுமரி, தாமிரபரணி, திற்பரப்பு உள்ளிட ஆறுகளில் விநாயகர் சிலைகள் பூஜை செய்து ஊர்வலமாக விஜர்சனம் செய்யப்படுகிறது.
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் சிலை வைக்க போலீசார் சார்பில் எதிர்ப்புகள் தெரிவித்த போதிலும் சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் வீட்டில் மற்றும் பொது இடங்களில் பூஜையில் வைப்பதற்காக இருந்த விநாயகர் சிலைகளை நள்ளிரவில் திருவட்டார தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பறிமுதல் செய்து அதனை எடுத்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் தற்போது விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் இடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
English Summary
Kanyakumari Police confiscated Ganesh idols Shiv Sena party leader house