கன்னியாகுமரி : திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல 5 மாதங்கள் தடை.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபமும், அதன் அருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளன. இவற்றை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

திருவள்ளுவர் சிலை உப்புக் காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக நான்காண்டுகளுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த ரசாயன கலவை பூசப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணிகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில் ஒரு கோடி மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணி இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. அதன் காரணமாக இன்று முதல் சுமார் 5 மாதங்கள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Tourists banned from visiting Thiruvalluvar statue for 5 months


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->