பூந்தமல்லி | மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவன்-மனைவி.!
karaiyansavadi lady attack case
பூந்தமல்லி அருகே மாடு காணாமல் போனதற்கு, தன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பதா? என்று, மாட்டின் உரிமையாளரான மூதாட்டி அவரின் மகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. 80 வயதாகும் இவர் மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
அண்மையில் இவரின் மாடு காணாமல் போகவே, இது குறித்து தனது மகள் ரேணுகாவுடன் சேர்ந்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவரின் அந்த புகார் மனுவில், தனது வீட்டின் அருகே உள்ள ரமேஷ் என்பவர் மீது, மாடு காணாமல் போனது குறித்து சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்த தகவல் ரமேஷுக்கு தெரிய வரவே, ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியுடன் சேர்ந்து மூதாட்டி இந்திராணியையும், அவரின் மக்களையும் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கினார்.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்துள்ளனர்.
English Summary
karaiyansavadi lady attack case