விருந்தில் கறி இல்லை.. வெறியுடன் தாய் மாமன் எடுத்த முடிவு..? இரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்த வாலிபர்.!
Kari-Virunthu-Madurai-Murder
விருந்தில் கறி இல்லை என்ற தகராறில் உறவினர்களுக்குள் நடந்த மோதல் கொலையில் முடிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த சாணம் பட்டியைச் சேர்ந்த பிரபு, தனது தாய் மாமா வீட்டு திருமண நிகழ்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த உறவினர்களுக்கு தலைவாழை இலையுடன் விருந்து படைக்கப்பட்டிருக்கிறது.
அந்த விருந்தில் தனக்கு கறி பரிமாறப்படவில்லை என்று கோபித்து கொண்டு புறப்பட்ட பிரபு , தனது நண்பர்களுடன் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அவரது மாமா கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபுவை வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
கத்தி குத்தினால் படுகாயம் அடைந்த பிரபு, சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவ மனையில் உயிரிழந்தார் தப்பியோடிய கார்த்திக்கை வாடிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
வெறும் வாய் தகராறில் ஆரம்பித்த சண்டை இப்படி கொலையில் முடியும் என்று நினைத்துக்கூட பார்க்காத உறவினர்கள், இந்த சம்பவத்தை கண்டு திடுக்கிட்டனர். பிரபுவின் மாமா கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் நடந்திருக்கலாம் என்று விருந்துக்கு வந்துள்ள உறவினர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணையை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.
English Summary
Kari-Virunthu-Madurai-Murder