அடுத்த பீதி... கர்நாடகாவில் பரவும் டெங்கு! தமிழக எல்லையில் தீவிர சோதனை!
Karnataka spread Dengue TN border vehicle inspection
கர்நாடகா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பலப்படுத்த என தமிழக சுகாதாரத்துறை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கர்நாடக எல்லை பகுதியில் உள்ள அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனை சாவடி மற்றும் பர்கூர் சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்பவர்களும் அதிக அளவில் பயணிக்கின்றனர். குறிப்பாக சரக்கு வாகனங்கள் இந்த வழியில் அதிக அளவில் சென்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தமிழக சுகாதாரத்துறை எல்லை பகுதியில் அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு பிறகு அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சுகாதார துறையினர் வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல், இரும்பல் மற்றும் நோய் அறிகுறிகள் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுரை தெரிவித்து அனுப்பி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.
English Summary
Karnataka spread Dengue TN border vehicle inspection