கரூர் ஆடிட்டர் அலுவலகத்தில் புகுந்த அமலாக்கத்துறை! முதல்முறையாக இன்று நடந்த நிகழ்வு! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கட்டி வரும் புதிய வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், அவரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் நடத்தப்பட்ட இந்த சோதனையை தொடர்ந்து, விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால், கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஏற்கனவே சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், தற்போது கட்டி வரும் புதிய சொகுசு பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கரூர் மாவட்டம் செங்குந்தபுரத்தில் உள்ள ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகத்தில் சற்றுமுன் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின், துணை ராணுவ படையினரின் பாதுகாப்பு இல்லாமல் அமலாக்கத் துறையினர் முதல் முறையாக இந்த சோதனை நடந்து வருகிறது.

இந்த இரு இடங்கள் தவிர  தவிர வேறு எந்த இடத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை எதுவும் மேற்கொள்ளவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur ED raid in sathishkumar office Senthilbalaji case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->