#BigBreaking | மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்!
Karur mayanur Govt School Girls Death
கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி, புதுக்கோட்டை மாவட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாயனூர் கதவனைப் பகுதிகள் குளிப்பதற்காக வந்த அரசு பள்ளி 15 மாணவிகளில் நான்கு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், மாயனூர் கதவனை அருகே ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவியை காப்பாற்ற முயன்ற போது, மூன்று மாணவிகள் நீரில் மூழ்கி, 4 மாணவிகளும் மூச்சு திணறி பலியாகி உள்ளனர்.
தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய நான்கு மாணவிகளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
திருச்சியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி சேர்ந்த இந்த நான்கு மாணவிகளும் நேரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், "இந்த பகுதி பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி. இதற்கான அறிவிப்பும் வைக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி மாணவிகள் இங்கு குளிக்க வந்ததால் இந்த துயரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Karur mayanur Govt School Girls Death