கவரப்பேட்டை ரயில் விபத்து திட்டமிட்ட சதியா? ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சொன்ன தகவல்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிசா ரயில் விபத்தை போல இன்டெர் லாக்கிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சரக்கு ரயில் நிற்கும் போது கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வழித்தடத்தில் தானியங்கி அமைப்பு தவறான சிக்னல் அனுப்பி உள்ளதா? என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

இது குறித்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மேலும் தெரிவிக்கையில், கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து என்பது திட்டமிட்ட சதியா? இல்லை மனித தவறா? என்பதை இப்போது சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார் 

இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே முன்னாள் அதிகாரி மனோகரன் தெரிவிக்கையில், இந்த ரயில் விபத்து இன்டெர்லாக்கிங் சிஸ்டம் தோல்வியால் ஏற்பட்டிருக்க வாய்ப்பு குறைவு.

ஒடிசா விபத்தை போல பராமரிப்பால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

ஒருவேளை இன்டெர் லாக்கிங் சிஸ்டம் தோல்வியால் விபத்து நேரிட்டால் டேட்டா லாகினில் அது தெரிய வந்துவிடும். ரயில்வே பாதையில் தடங்கல் ஏதும் இல்லாத போது தான் கிரீன் சிக்னல் கொடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kavarapettai Train Accident Railway


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->