காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal



கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தின் கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 57 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு தற்போது வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் உள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால், காவேரி கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரை ஓர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இப்போதே தண்ணீர் திறந்து விட்டால் தான் கர்நாடகாவில் இருந்து வருகின்ற நீரை நாம் சேமித்து வருங்காலத்தில் பயன்படுத்த முடியும். எனவே அணை நிரம்பும் வரை காத்திருக்காமல் இப்போதே தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kaveri River Flood warning namakkal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->