சிறையில் இருந்து வெளிவந்த கவின் அம்மா.! உடன் இருப்பது யார் பார்த்தீர்களா.!?
kavin photo with mother
பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இதில் பிக்பாஸ் பட்டத்தை முகேன் வென்றார். சாண்டி இரண்டாவது இடத்தையும், லாஸ்லியா மற்றும் ஷெரின் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வந்த கவின், பிக்பாஸில் பாதியிலேயே வெளியில் வந்தார். அவருடைய தாய் ராஜலட்சுமி மற்றும் அவருடைய பாட்டி தமயந்தி உள்ளிட்டோரை சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்ததாக காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் சீட்டு பணம் கட்டி ஏமாந்ததாக 34 பேர் சாட்சி அளித்தனர் நிலையில் விசாரணையில் குற்றம் பூர்த்தி செய்யப்பட்டு அவர்களுக்கு 5 ஆண்டு சிறையும் 2000 அபராதம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு 29 லட்சம் கொடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் இருந்ததால் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின் முதல் வேலையாக தன்னுடைய தாய் மற்றும் அவரது பாட்டியைப் ஜாமினில் எடுத்தார். மேலும், அவர்களின் கடன்களை அடைத்து விடுவேன் என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது கவின் தன்னுடைய தாய் மற்றும் பாட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.