அமராவதி தடுப்பணை விவகாரம் : தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம்! - Seithipunal
Seithipunal


கேரள அரசின் தடுப்பணை விவகாரம் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம்.

காவிரிப் படுகையான அமராவதி துணைப்படுகையின் சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாக சில ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து குறையும் என்று தமிழக விவசாயிகளிடையே அச்சம் எழுந்துள்ளது.

எனவே இதுகுறித்து தமிழக அரசு கேரள அரசிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக எதிர் கட்சிகள் சில நாட்களாக வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று (மே 23) தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், " இதுவரை இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் தமிழக அரசிடமோ, காவிரி மேலாண்மை வாரியத்திடமோ வழங்கப்படவில்லை. எனவே தமிழக அரசு கேரள நீர்வளத் துறையிடம் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி இத்திட்டம் குறித்த முழு விவரங்களை தமிழக அரசிடம் வழங்க வேண்டும்.

இத்திட்டத்தை தமிழக அரசு சார்பில் ஆய்வு செய்யவும், இரு மாநிலங்களுக்கு இடையேயான தோழமை உணர்வை நிலைநாட்டவும், மேலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைக்கும்படியும் கேரள அரசு சம்மந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Amravati new Dam CM mk Stalin letter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->