திண்டுக்கல்லில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! தமிழகத்தில் தொடரும் அடுத்தடுத்த சம்பவங்கள்!
Kerala College girl Abused in theni
திண்டுக்கல் அருகே தேனியை சேர்ந்த கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலில் துன்புறுத்தல் செய்ததாக நர்சிங் கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம்ம், தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவியை, நான்கு பேர் சேர்ந்த கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
பின்னர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாணவியை அந்த நான்கு பேர் சேர்ந்த கும்பல் இறக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 40 நாட்களில் பள்ளி மாணவிகள், இளம் பெண் உட்பட 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kerala College girl Abused in theni