ரேஷன் கடையில் 50 மி.லி மண்ணெண்ணெய் விநியோகம் - அதிர்ச்சியில் உறைந்த சிவகங்கை மக்கள்.!   - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ரேஷன்கடைகளுக்கு ஒதுக்கப்படும் மண்எண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி ரேஷன்கடைக்கு இந்த மாதம் 38 லிட்டர் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

அதனை மொத்தமுள்ள 950 ரேஷன்கார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு கார்டுக்கும் 50 மில்லி அளவு மட்டுமே வினியோகம் செய்ய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் படி 50 மில்லிக்கு தலா ரூ.2 வீதம் அட்டைதாரர்களிடம் வசூலிக்கப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, "கடந்த காலங்களில் ஒரு கார்டுக்கு 3 லிட்டர் வீதம் மண்எண்ணெய் வழங்கினர். அது படிப்படியாக 2 லிட்டர், ஒரு லிட்டர், அரை லிட்டராக குறைந்தது. பின்னர் 200 மில்லி வழங்கினர். தற்போது 50 மில்லி மட்டுமே தருகின்றனர். இதை வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும்" என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து கூட்டுறவு அதிகாரிகள் பேசியதாவது, "சமையல் சிலிண்டர் வைத்திருப்போருக்கு மண்எண்ணெய் கிடையாது. ஆனால் அவர்களும் வாங்குகின்றனர். வீடுகளுக்கு சிலிண்டர் இணைப்பை கணக்கிட்டு மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டது. இதனால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது," என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerosene provide 50 ml in sivakanga kollangudi ration shop


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->