திருட்டு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய கொள்ளயர்கள் கைது..  பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு ! - Seithipunal
Seithipunal


இராணிப்பேட்டை மாவட்டத்தில்  பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளயர்களை மாவட்ட காவல்துறை கைது செய்து அவர்களிடமிருந்து   பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள்,வெள்ளிபொருட்கள்மற்றும்இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்பல்வேறு வீடுகள் மற்றும் இரு சக்கரவாகனங்களை திருடும் நபர்களை கண்டு பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தசுக்லா உத்தரவிட்டார் ,

இந்த  உத்தரவின் பேரில் அரக்கோணம் உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் ஜாபர்சித்திக் அவர்களின் மேற்பார்வையில் அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளர் தங்க குருநாதன் அவர்களின் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொள்ளையர்கள்  பிரபாகரன் (வ/32) த/பெ ராஜேந்திரன் நடுத்தெரு, தோமூர்கிராமம், திருவள்ளூர் மாவட்டம்  யுவராஜ் (வ/30) த/பெ கண்ணன்காஞ்சப்பாடி கிராமம், திருவள்ளூர் மாவட்டம் என்பவர்களை கைது செய்தது.

மேளம் அவர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள்,வெள்ளிபொருட்கள்மற்றும்இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுநீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்டு கொள்ளயர்களை  கைது செய்த காவல் அதிகாரிகள்,மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா,இ.கா.ப.,அவர்கள் வெகுவாகப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Key robbers involved in theft cases arrested Gold jewellery worth lakhs of rupees recovered


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->