கும்மிடிப்பூண்டியை அதிர வைத்த சம்பவம்... கடத்தப்பட்ட அதிமுக கவுன்சிலர் மீட்பு...!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் அருகே கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரமேஷ். இவர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 1வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் ஜேக்கப் என்ற மகனும் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சிலர் சென்ற பொழுது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் மாயமானது தெரியவந்தது. இதனை அடுத்து பெண் கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் இருவரையும் மர்ம கும்பல் வீடு புகுந்து காரில் கடத்திச் சென்றதாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கரியா சக்தியிடம் ரமேஷ் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கடத்தப்பட்ட பெண் கவுன்சிலரின் செல்போன் எண்ணை ஆராய்ந்த பொழுது அது கடைசியாக ஆந்திராவில் அணைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் ஆந்திர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு 10:00 மணி அளவில் அதிமுக கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் இருவரும் அவர்களது உறவினரை தொடர்பு கொண்டு கடத்தல் காரர்கள் தங்களை விடுவித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இருவரும் கத்திவேடு அருகே இருப்பதாகவும் தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். கடத்தப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kidnapped AIADMK councilor rescued by relations


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->