கடத்தப்பட்ட குழந்தை... திக் திக் நிமிடங்கள்! 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!! - Seithipunal
Seithipunal


முத்துப்பாண்டி விஜயலட்சுமி தம்பதியினர் புதுச்சேரி  கடற்கரையில் பலூன் விற்கும் தொழில் செய்து வருகிறனர். இந்நிலையில், கடற்கரையில்  விளையாடி கொண்டிருந்த இவர்களது மூன்றரை வயது குழந்தை திடீரென்று  காணவில்லை.  இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரண்டு மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு  ஆட்டோவில்அனுப்பி வைத்தது சிசிடிவி கேமிராவை ஆய்வு  செய்த போது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.  

இந்நிலையில் , ஆட்டோ டிரைவர்  ஒருவர் நள்ளிரவில் குழந்தையுடன் ஒரு பெண்ணை காரைக்கால்  சாணகரை பகுதியில் பகுதியில் இறக்கி விட்டது போலீசாருக்கு  தெரியவந்தது.   இதனை தொடர்ந்து காரைக்கால் பகுதியில் விசாரணை மேற்கொண்ட போது, பெண் ஒருவர் குழந்தையுடன் தப்பி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது .  அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.  இந்த கடத்தலுக்கு தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் புதுச்சேரியில் கைது செய்தனர்.  கடத்தப்பட்ட குழந்தையை 24   மணி நேரத்திற்குள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kidnapped child... tick tick minutes! Police rescued in 24 hours!!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->