பிரபல நடிகரின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகரின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்.!

பிரபல நடிகரான மோகன் சர்மாவுக்கு சென்னை போயஸ்கார்டனில் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு இருந்துள்ளது. இந்த வீட்டை விற்பனை செய்ய தனியார் நிறுவனம் மூலம் விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், 2 இடைத்தரகர்கள் மூலம் மருத்துவர் ராஜா ரமணன் என்பவருக்கு கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.

இந்த வீடு மருத்துவருக்கு விற்பனை செய்த நாள் முதலே, இடைத்தரகர்கள் இருவரும் அந்த வீட்டில் அத்துமீறி நுழைந்து வசித்து வந்துள்ளனர். இது தொடர்பாக நடிகர் மோகன் சர்மா அவர்களிடம் கேட்ட போது, இருவரும் மரியாதை இல்லாமல் பேசியுள்ளனர். இதனால், மோகன் சர்மா சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக மோகன் சர்மாவுக்கும், இடைத்தரகர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மோகன் சர்மா சென்னை தி.நகரில் இருந்து சேத்துப்பட்டில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து கடுமையாக தாக்கியது. மேலும், அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் குறித்து முதல்வரின் தனிப்பிரிவிலும் அவர் புகார் அளித்துள்ளார். காயமடைந்த அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kill thread to actor mohan sharma family


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->