தமிழ் மொழியில் சட்டப்படிப்பு கொண்டு வர நடவடிக்கை..! மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்டப்பல் கழகத்தில் நடைபெற்ற 12வது பட்டமளிப்பு விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த பட்டமளிப்பு விழாவில் 41 பேர் தங்கப்பதக்கமும், 5176 பேர் பட்டங்களும் பெற்றனர். மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

பின்னர் விழா மேடையில் பேசிய அவர் "சட்டப் படிப்புகளை தமிழ் உட்பட அந்தந்த மாநில தாய் மொழியில் படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும். நீதிமன்றத்திற்கும் சாமானியருக்கும் இடையே உள்ள இடைவெளி குறைக்கப்பட வேண்டும். சாமானியர்களும் வழக்காடு மொழியை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றங்கள் வரை ஸ்மார்ட் அறைகள் மூலம் வீடியோ கான்பிரன்ஸ் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இது தொடர்பாக நீதிபதிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். நாடு முழுவதும் பல கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. அவற்றை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விரைந்து முடிக்க வேண்டும்" என விழா மேடையில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kiran Rijiju announced Action to bring law edu in state languages


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->