கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்... விசாரணை நீதிபதி அதிரடியாக மாற்றம்..!! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் முக்கிய குற்றவாளியான சேலம் ஆத்தூரை சேர்ந்த டிரைவர் கனகராஜ் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார். 

இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகாலமாக நடைபெற்றுவருகிறது. தற்பொழுது இந்த வழக்கு சிவிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொடநாடு வழக்கை கடந்த ஒரு வருடமாக நீதிபதி முருகன் என்பவர் விசாரித்து வந்தார். இந்த வழக்கு சிபிடிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது முதல் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முருகன் சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி முருகனுக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் ரீதியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் திடீரென நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KoduNadu case judge transferred


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->