#Breaking: கோவையில் இதெற்கெல்லாம் தடை.. மீறினால்.? காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அதிரடி உத்தரவு.!
kovai Gandhi jayanthi restriction announcement
கோவை பகுதியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்து இறைச்சி விற்பனை செய்வது முழுதும் தடை செய்யப்பட்டிருக்கிறது. அன்றைய தினத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், "2022 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும் இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி, பன்றி இறைச்சி உள்ளிட்ட கடைகளை மூடும்படி தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் சக்தி ரோடு, உக்கடம், போத்தனூர் அறுவை மனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாநகராட்சியின் உத்தரவை மீறி செயல்படுபவர் மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்." என்று மாநகராட்சி ஆணையாளர் திரு.பிரதாப் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
English Summary
kovai Gandhi jayanthi restriction announcement