மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு - கே.பி.ஒய். பாலா நேரில் நிதியுதவி.!
kpy bala compensation to landslide died peoples family in thiruvannamalai
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக் கொட்டித் தீர்த்துள்ளது. அந்த வகையில், திருவண்ணாமலையில் இடைவிடாமல் பெய்த பலத்த மழையால், அண்ணாமலையார் மலையில் வ.உ.சி. நகர் பகுதிக்கு மேலே உள்ள ராட்சத பாறைகள் பயங்கர சத்தத்துடன் உருண்டு கீழ்நோக்கி வந்தன.
இதனுடன் பாறைக்கு கீழே உள்ள மண் பெயர்ந்து வ.உ.சி.நகரில் உள்ள வீடுகள் மீது சரிந்ததில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்திற்கு தொலைக்காட்சி நடிகர் கே.பி.ஒய். பாலா நேரில் சென்றார்.
அங்கு மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பாதிக்கப்பட்ட நான்கு குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கினார்.
English Summary
kpy bala compensation to landslide died peoples family in thiruvannamalai