சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் கே.ஆர். ஸ்ரீராம்! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் ஆர். மகாதேவன். இவர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதனால், அந்த பதவி காலியானது.

இதற்கிடையே காலியாக இருந்த பதவிக்கு வேறு நீதிபதியை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அந்த அறிவிப்பின் படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், உயர்நீதிமன்ற  நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கு முன்னதாக கே. ஆர். ஸ்ரீராம் மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்து தற்போது  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kr sriram was sworn in as the Chief Justice of Madras High Court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->