சரோனை 2 மாதத்தில் 10 முறை கொலை முயற்சி செய்த க்ரீஷ்மா! போலீசாரிடம் அளித்த பகீர் வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கல்லூரி மாணவி கொலை செய்த வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. காதலன் சரோனை கடந்த இரண்டு மாதத்தில் பத்து முறை கொலை முயற்சி செய்தது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. தமிழக கேரளா எல்லை பகுதியான பாரசாலை பகுதியைச் சேர்ந்த சரோன் என்ற மாணவனுக்கு அவருடைய காதலி க்ரீஷ்மா என்பவர் கடந்த மாதம் 14 ஆம் தேதி கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக அவருடைய பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து க்ரீஷ்மா, அவருடைய தாயார் சிந்து, அவருடைய தாய் மாமன் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் க்ரீஷ்மா பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். இதனை அடுத்து கொலையாளி க்ர்ஷ்மாவை சம்பவம் நடந்த பகுதிகளுக்கும் அவர்கள் சுற்றித்திரிந்த பகுதிகளுக்கும் கூட்டிச்சென்று கொலை எவ்வாறு நடைபெற்றது என்ற செயல்முறை விளக்கத்தை காவல்துறையினர் பதிவு செய்தனர். 

மேலும் நேற்று கேரளாவில் உள்ள கடற்கரை பகுதி சுற்றுலா தலங்களுக்கு க்ரிஷ்மாவை நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதேபோன்று இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர்கள் சென்ற சுற்றுலா தலங்களுக்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் படித்த கல்லூரி அமைந்துள்ள நெய்யூர் பகுதியில் கூட்டிச் சென்று விசாரணை நடத்திய பொழுது க்ரிஷ்மா பல திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

க்ரிஷ்மா அளித்த வாக்குமூலத்தில் கல்லூரியில் பயின்ற பொழுது தான் வைத்திருந்த மாம்பழம் ஜூஸில் டோலா எனும் மாத்திரையை அதிக அளவில் கலந்து சரோனுக்கு கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். குளித்தலை பகுதியில் உள்ள பாலத்தின் அருகே நின்று கொண்டு ஃப்ரூட்டி சேலஞ்ச் என்ற பெயரில் முதன்முறையாக டோலா கலந்த மாம்பழ ஜூசை சரோனுக்கு கொடுத்துள்ளார். 

இதேபோன்று பலவித மாத்திரைகளை பலமுறை ப்ரூட்டி சேலஞ்ச் என்ற பெயரில் சரோனுக்கு கொடுத்துள்ளார். ஆனால் பலமுறை முயற்சி செய்தும் சரோன் உயிரிழக்காததால் செய்வதறியாத க்ரிஷ்மா தனது தாய் மாமன் வீட்டில் இருந்த ரப்பர் தோட்டங்களுக்கு வைக்கும் பூச்சி மருந்தை பயன்படுத்தி சரோனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தான் கடந்த 14 ஆம் தேதி சரோனை தனது வீட்டிற்கு க்ரிஷ்மா அழைத்துள்ளார். 

இதனை அடுத்து க்ரிஷ்மா வீட்டுக்குச் சென்ற சரோனுக்கு கசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அப்பொழுது வாந்தி மயக்கம் ஏற்படவே சரோன் வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட சாரோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். க்ரிஷ்மா போலீசாரிடம் அளித்த இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishma tried to kill Saron ten times in two months


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->