'ஆபாச படம் பாத்தியே.. அபராதம் கொடு.' இளைஞர்களே உஷார்.. மோசடி கும்பல் பணம்பறிப்பு.!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் சைபர் கிரைம் போலீஸ் போல நடித்து நகைகடை ஊழியரிடம் இருந்து பணம் பறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பேரிகை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் என்ற நபர் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரிடம் சைபர் கிரைம் போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர் கொண்ட கும்பல் அவர் குழந்தைகள் குறித்த ஆபாச படம் பார்த்ததாக கூறி மிரட்டி இருக்கின்றனர்.

அந்த நபரும் இதை உண்மை என்று நம்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அபராதம் என்று கூறி அவர்கள் பணம் கேட்க போன் பே மூலம் அவர்கள் கேட்ட பத்தாயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். அதன் பின் அவருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அந்த கூகுள் பே எண்ணுக்கு கால் செய்த போது அந்த செல்போன் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனை தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்திரகுமார் கிருஷ்ணகிரி காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் சந்திரகுமாரிடம் மிரட்டி பணம் பறித்த மால்வின், வேடியப்பன், மணிமுத்து, மாரியப்பன் உள்ளிட்ட பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri men cheated by 4 as Cyber Crime Police


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->