கிருஷ்ணகிரி | மகனை வெட்டி கொன்ற தந்தை மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது! காதல் மனைவி பரபரப்பு வாக்குமூலம்!
Krishnagiri oothangarai love marriage murder case
மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்ததால் மகனை கொன்ற தந்தை தண்டபாணி மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கருமாடபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபானி. இவரின் மகன் சுபாஷ் (வயது 25) திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்த ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த அனுஷா (வயது 23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த திருமண விவகாரம் சுபாஷின் தந்தை தண்டபானிக்கு தெரிய வரவே, இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தந்தையின் எதிர்ப்பை மீறி, காதல் மனைவியுடன் சுபாஷ் பாட்டி வீட்டில் குடியேறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த நேற்று இரவு, வீட்டில் தூங்கிகொண்டிருந்த மகன் சுபாஷ், தாய் கண்ணம்மா (வயது 65), மருமகள் அனுஷா ஆகிய மூன்று பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி தலைமறைவாகியுள்ளார் தண்டபாணி.
இதில், மகன் சுபாஷ், தாய் கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அனுஷா ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து அனுஷா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தூங்கி கொண்டிருந்த தங்களை தண்டபாணி தாக்கியதாகவும், தான் தப்பிக்க முயன்ற போதும் என்னை விடாமல் வெட்டியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தண்டபாணி மீது அனுஷா அளித்த புகாரின் அடிப்படியில் போலீசார் வன்கொடுமை சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தண்டபாணியை தேடி வருகின்றனர்.
English Summary
Krishnagiri oothangarai love marriage murder case