#கிருஷ்ணகிரி: பொது மக்களுக்கு வனத்துறை விடுத்த எச்சரிக்கை..!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் அருகே இருக்கும் வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதன் காரணமாக, பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கர்நாடகா மாநிலத்தின் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வழியே ஓசூர் வனச்சரகு பகுதிக்கு இடம்பெயர்வது வழக்கம். 

இந்த நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் யானைகள் இடம்பெயர்ந்து ஜவஹலகிரி பகுதியில் முகாமிட்டுள்ளன. 

எனவே அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnakiri forest Officer warning to peoples


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->