மதுபானம் வாங்க சென்றவர் இரத்த வாந்தி எடுத்து மரணம்! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


கும்பகோணத்தில் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க வந்தவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம், காசிராமன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் இன்று மதியம், பழைய டைமண்ட் டாக்கிஸ் பின்புறம் செயல்படும் அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்க சென்றுள்ளார். 

அப்போது திடீரென முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டு, ரத்த வாந்தி எடுத்து கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் உடனடியாக 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர் அவர்கள் வந்து பார்த்த, முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kumbakonam person vomited blood and died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->