நீலகிரி : காட்டு யானை தாக்கி கூலித்தொழிலாளி பலி.! போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.!
Laborer killed in elephant attack in Nilgiris
நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் பார்வுட் அருகே டெலோவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சிவனாண்டி(62). இவர் விரகு எடுப்பதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார். பின்பு நீண்ட நேரம் ஆகும் சிவனாண்டி வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றுள்ளனர்.
அப்பொழுது டெலோவுஸ் காபிகாட்டில் காட்டு யானை தாக்கி சிவனாண்டி இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சிவனாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் சிவனாண்டியின் உறவினர்கள் காட்டு யானை ஊருக்குள் வராமல் நடவடிக்கை எடுக்கக்கோரி உடலைக் கொண்டு செல்ல விடாமல், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சிவனாண்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Laborer killed in elephant attack in Nilgiris