கூலி தொழிலாளர் வங்கி கணக்கில் தவறாக செலுத்தப்பட்ட ரூ.32 லட்சம்!! - Seithipunal
Seithipunal


எண்ணூர் பகுதியைச் சேர்ந்த கூடி தொழிலாளரின் வங்கி கணக்குகில் தவறாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.32 லட்சம். அதிர்ச்சி அடைந்த கூலி தொழிலாளி.

 சென்னை 800 பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதியழகன். இவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்னும் வங்கியின் எண்ணூர் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.40 பணத்தை எடுப்பதற்கான படிவத்தை எழுதி அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி அடைந்தார்.

 இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் கும்பல் வேறொரு வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவதற்கு பதிலாக உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பியதால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தார். இது தொடர்பாக வங்கி மேலாளரிடம் தனது வங்கி கணக்கை மீட்டுத் தருமாறு மதியழகன் புகார் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Labour bank account False send 32lakhs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->