பொய் வழக்கு போடும் தாம்பரம் போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரம் மாநகர் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உரிமையியல் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடுவதை தட்டி கேட்கும் வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோன்று சிட்லபாக்கம் காவல் நிலைய காவலர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சினிமாவுக்கு சென்று விட்டு வந்த ஒரு வழக்கறிஞரை அவமதித்து வாகன சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 

அதேபோன்று சேலையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் நடந்த கொள்ள தொடர்பாக ஓராண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவு பெற்று சென்ற வழக்கறிஞரை காவலர்கள் அவமாரியாதை செய்துள்ளனர். காவலர்களின் அராஜ போக்கு குறித்து தாம்பரம் காவல் உதவி ஆணையரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக தாம்பரம் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அனைத்து வழக்குகளையும் புறக்கணித்த வழக்கறிஞர் சங்கத்தினர் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் போராட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தடுப்பு வேளி அமைத்து போலீசார் போராட்டக்காரர்களை தடுக்க முயன்றனர். 

இதனால் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது தாம்பரம் காவல் உதவி ஆணையருடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உண்டானது. வழக்கறிஞர்கள் தங்களின் மீது பொய் வழக்கு போடும் அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக தாம்பரம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lawyers protest against Tambaram police for filing false case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->