சுற்றி திரியும் மாடுகள்: உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை: எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி ஆணையர்! - Seithipunal
Seithipunal


சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் மாடு மூட்டி படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்களுக்கு மாடுகளால் பாதிப்பு ஏற்படுவதால் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை எடுத்துள்ளார். 

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களை காயப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. 

திருவல்லிக்கேணி பகுதியில் நேற்று முன்தினம் கஸ்தூரி ரங்கன் (வயது 65) என்ற முதியவரை மாடு முட்டியதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மாநகராட்சி, காவல்துறையுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் பூக்கடை பகுதிகளில் 120 மாடுகளும், புளியந்தோப்பில் 48, திருவல்லிக்கேணி மயிலாப்பூர் பகுதிகளில் 367 என மாநகரம் முழுவதும் 1986 மாடுகள் சாலையில் சுற்றி திரிந்தது தெரியவந்துள்ளது. 

மாடுகளைப் பிடிக்கச் சென்றால் மாநகராட்சி பணியாளர்களை மிரட்டுகின்றனர். பொது மக்களின் உயிருக்கு இனிவரும் காலங்களில் மாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

தன்னார்வலர்கள் மாடுகளுக்கு உதவி செய்வதாக இருந்தால் மாடுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

legal action against cow owners Corporation Commissioner


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->