சுற்றித்திரியும் சிறுத்தை..! இரையான பழங்குடியின பெண்: கொந்தளிக்கும் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கொளப்பள்ளி பகுதியில் கடந்த 21ஆம் தேதி முதல் சிறுத்தை ஒன்று பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி வருகிறது. 

கடந்த 21ஆம் தேதி 3 பெண்களை சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்த பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

நேற்று கொளப்பள்ளி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை சிறுத்தை தாக்கியுள்ளது. இதில் குழந்தை படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

கடந்த 21ஆம் தேதி முதல் சிறுத்தையை பிடிப்பதற்கு 5 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி சிறுத்தையை பிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஆனால் சிறுத்தை இதுவரை கூண்டில் சிக்கவில்லை. இந்த நிலையில் சிறுத்தையை சூட்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி கொளப்பள்ளி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இருப்பினும் பொதுமக்கள் சிறுதையை சூட்டு கொலை செய்து பிடிக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 3 மாதங்களாக இந்த பகுதியில் சிறுத்தைகள் சுற்றித் திரிகின்றன. கடந்த 21ஆம் தேதிக்கு முன்னதாக சிறுத்தைகள் கால்நடைகளை தாக்கி வந்த நிலை தற்போது மனிதர்களை தாக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leopard killed Tribal woman public protested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->