13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் 13 வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இந்த சிறுமியின் தாய் ஆட்டோ டிரைவரை 2வாது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிறுமியின் பள்ளியில் கடந்த 2020ஆம் ஆண்டு பாலியல் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்பொழுது சிறுமி தன்னுடைய வளர்ப்பு தந்தை இரவு நேரங்களில் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில், கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூபாய் 10 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Life imprisonment for foster father who raped 13 year old girl in Kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->