பள்ளிக், கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்த மாவட்டத்தில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொது விடுமுறை, அரசு விடுமுறை மட்டுமல்லாது, உலகப் பிரசித்திபெற்ற கோவில்களின் திருவிழாக்களின் போது உள்ளூர் விடுமுறையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலய திருவிழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். 

இந்த திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில், தூத்துக்குடியில் இந்த வருடம் 442-வது ஆண்டு பனிமய மாதா பேராலய திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால், நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அரசு கருவூலகங்கள், முக்கிய அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

local holiday to thoothukudi districts in panimaya matha peralayam temple festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->