மீண்டும் பாஜக தான் ஆட்சியை அமைக்கும் - ஜி.கே வாசன் உறுதி!! - Seithipunal
Seithipunal


நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றது. பாஜக சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தூத்துக்குடி, ஈரோடு ஸ்ரீபெரும்புதூர் என மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் ஜி.கே வாசன் கலந்து கொண்டார்.

மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஜி.கே வாசன் பேசுகையில், சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக பல்வேறு பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கான உரிய ஏற்ப்படை தமிழக அரசு வழங்க வேண்டும். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

 தொடர்ந்து பேசிய ஜி.கே வாசன்,நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை பற்றி மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Loksabha election BJP win more seats and return government


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->