வாக்காளர்களுக்கு குட் நியூஸ்..அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம்.!! - Seithipunal
Seithipunal


நேற்று மாலை 6 மணியுடன் மக்களவை தேர்தலில் பிரச்சாரம் நிறைவடைந்தது. அனைத்து கட்சி வேட்பாளர்கள் அனைத்து கட்சி தலைவரும் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு முன்னிட்டு கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டல நகர பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்று திறனாளிகள் இலவசமாக பயணம் செய்யலாம். காலை 6:00 மணி முதல் இரவு 7 மணி வரை ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம் என்று கோவை போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LokSabha election sixty yea old handicap free bus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->