விழுப்புரம் : இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மதுபோதையில் ரோட்டில் உறங்கிய லாரி ஓட்டுநர்.!! - Seithipunal
Seithipunal


இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மதுபோதையில் ரோட்டில் உறங்கிய லாரி ஓட்டுநர்.!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. லாரி ஓட்டுநராக வேலை பார்க்கும் இவருக்குத் திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். இவருடைய மனைவி இறந்து விட்டதனால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதில், அவருக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி மும்பையிலிருந்து இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென லாரியை நிறுத்திவிட்டு மது அருந்தியுள்ளார். 

அதன் பின்னர் ராஜீவ் காந்தி லாரியை இயக்கிக் கொண்டு செநின்றுள்ளார். ஆனால், அவரால் மேற்கொண்டு லாரியை இயக்க முடியாமல் சூலூர் காவல் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு லாரியிலேயே படுத்து உறங்கியுள்ளார்.

நீண்ட நேரமாக லாரி ஒரே இடத்தில நின்றதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் லாரிக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது உள்ளே ஓட்டுநர் தூங்கிக் கொண்டிருந்தார். அருகே மது பாட்டில்களும் இருந்துள்ளது. 

இதைப்பார்த்த காவலர்கள் ராஜீவ் காந்தியை எழுப்பியும் அவர் எழாததால் லாரியை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு ராஜீவ் காந்தி மீது தண்ணீரை ஊற்றி எழுப்பி அவரிடம் விசாரனை நடத்தினர்.

அதில், ஏற்கனவே எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இப்போ இரண்டாவது முறையும் பெண் குழந்தை பிறந்துள்ளது. நான் பார்க்கும் இந்த ஓட்டுநர் வேலைக்கு இரண்டு பெண் குழந்தைகளை வைத்து வளர்ப்பது மிகவும் கடினம். அந்த மன வருத்தத்தில் தான் மது அருந்தினேன். 

இதுவரைக்கும் என் குழந்தையைப் பார்க்கவில்லை. அதைப் பார்ப்பதற்கும் எனக்குப் பிடிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து, காவல்துறையினர் அவரிடம் அறிவுரை கூறி, மது போதையில் லாரி இயக்கியதற்காக அபராதம் விதித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lorry driver sleep with drunk in road for girl baby born


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->