திருமணமான 2 மாதத்தில் ஒரே கயிற்றில் காதல் தம்பதி தற்கொலை.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணமான 2 மாதத்தில் காதல் தம்பதி ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அனந்தமாடன்பச்சேரி பகுதியை சேர்ந்தவர் தங்கமுனியசாமி(28). இவர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவரும், துவரங்கை பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி(22) என்பவரும் காதலித்து வந்தனர்.

இதையடுத்து இவர்கள் இரண்டு பேருக்கும் பெற்றோர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் கணவன்-மனைவியிடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினமும் இருவரிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஒரே கயிற்றில் ஒரு முனையில் தங்க முனியசாமியும், மற்றொரு முனையில் சீதாலட்சுமியும் தூக்கில் பிணமாக தூங்கி உள்ளனர்.

இதையடுத்து இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரயோக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Loving Couple suicide in Thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->