வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் டிச.10 முதல் கனமழைக்கு வாய்ப்பு!
Low pressure in the Bay of Bengal Chance of heavy rain in Tamil Nadu from December 10
சென்னை: வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் எனக் கூறப்படுகிறது. இந்த தாழ்வு பகுதி டிசம்பர் 11-ம் தேதிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரை பகுதிகளை நோக்கிச் செல்லும்.
மழை பற்றிய முன்னறிவிப்பு
டிசம்பர் 8, 9: மாநிலத்தின் பல பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
டிசம்பர் 10: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் கனமழை.
டிசம்பர் 11: டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை.
டிசம்பர் 12: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும்.
டிசம்பர் 13: தென்காசி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்கள் வரும் 11-ம் தேதி வரை ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
English Summary
Low pressure in the Bay of Bengal Chance of heavy rain in Tamil Nadu from December 10