#BREAKING | பிரபல அரசியல் கட்சியின் கொடியை குறியீடாக வைத்த மாவீரன்! தடை கோரிய வழக்கில் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம், வருகின்ற 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

மாவீரன் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்களிடையே படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு பிரபல அரசியல் கட்சியின் கொடியால் தடை கோரும் அளவுக்கு சிக்கல் வந்துள்ளது.

மாவீரன் இந்திய ஜனநாயக கட்சியின் (ஐஜேகே) கொடியை பயன்படுத்தி உள்ளதை நீக்க கோரியும், படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் மாவீரன் படத்தின் பட காட்சிகளை மாற்றி அமைக்க வேண்டும்.

கொடியின் நிறத்தில் மாற்றங்கள் செய்த பின்னரே ஓடிடி மற்றும் சேட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும்.

மாவீரன் படத்தில் எந்த அரசியல் கட்சியும் குறிப்பிடவில்லை என்ற பொறுப்புத் திறப்பை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maaveran Movie Ban case Chennai HC IJK Political party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->