#BREAKING:: "14 வயது சிறுமியின் 24 வார கருவை" கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!!
Madras High Court allows abortion of 14 year old girl
சிறுமியின் கருவை கலைக்க 2 வாரம் கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது 14 வயது மகள் 24 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அவர் தனது கல்வியை தொடர விரும்புகிறார், மேலும் கர்ப்பத்தை சுமக்க விருப்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். எனவே 24 மாத கருவை கலைக்க அனுமதி வழங்க வேண்டும் என சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனுவில் தனது மகளுக்கு 14 வயது தான் ஆகிறது எனவும், உறவினர் மூலமே தனது மகள் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும், இதுகுறித்து செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான செங்கம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து தற்பொழுது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி தமிழ்நாடு அரசு மற்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் 24 மாத கருவை சுமக்கும் நிலையில் அவர் தொடர்ந்து கருவை சுமந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த கருவை கலைக்கலாம் என்று அரசு சார்பில் பரிந்துரை வழங்கப்பட்டது.
அதன்படி கரு கலைப்பு சட்டக்குழு வழங்கிய பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிறுமி சுமக்கும் 24 மாத கருவை கலைப்பதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் 2 வார கால அவகாசத்திற்குள் இந்த கருவை கலைக்க அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்தார்.
English Summary
Madras High Court allows abortion of 14 year old girl