அரசுக்கு அனுமதி வழங்கியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி.!!
Madrashc asked TNGovt on vallalar international centre
கடலூர் மாவட்டம் வடலூரில் அமைய உள்ள வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதற்கு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். வடலூர் சத்ய ஞானசபை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை.
இந்து சமய அறநிலைத்துறை அதன் கடமையை செய்தாலே போதும். சர்வதேச மையம் அமைக்க அனுமதி வழங்கியது யார்? அரசு கட்டிடம் என்றால் அனுமதி வாங்க கூடாதா? என காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதற்கான அனுமதிக்க கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் சத்திய ஞான சபைக்கு சொந்தமான நூற்றாறு இயக்க நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டு அறங்காவலர்களை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்
English Summary
Madrashc asked TNGovt on vallalar international centre