ED-க்கே பேரிடி.. வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!!
Madrashc cancelled Ed case against ocean life space
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓசன் லைப் ஸ்பேஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி இருந்தது.
தமிழ்நாடு அரசின் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமழக்கத்துறையானது இந்த சோதனையை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஓசன் லைஃப் ஸ்பேஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனதில் மத்திய குற்றப்பிரிப்பு போலீசார் வழக்கை ரத்து செய்ய நிலையில் அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
English Summary
Madrashc cancelled Ed case against ocean life space