மதுரை : பட்டப்பகலில் இளம்பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர் அதிரடியாக கைது! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே ஒரு தனியார் ஜெராக்ஸ் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வரும் நிலையில், இவரை சித்திக் ராஜா என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.  இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது

இந்த நிலையில், தன் காதலுக்கு இளம்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் கடும் ஆத்திரம் அடைந்த   இளைஞர், ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்து இளம்பெண் மீது கொலைவெறி தாக்குதல்  நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் இளம்பெண்ணின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட  இளைஞர், அங்கிருந்து உடனடியாக தப்பியோடினார்.

காயமடைந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை தாக்கிய இளைஞரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில்,  சி.சி.டி.வி. காட்சிகளின் மூலம்  இளம்பெண்ணை தாக்கிய சித்திக் ராஜா மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai a young man who attacked a young girl in broad daylight has been arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->