தமிழகத்தில்  பிற மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தைச் சேந்த சிதம்பரம் என்பவர் கேரளா மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், இன்று அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் தென்காசியில் ஒன்பது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக கேரள எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புக் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கபட்டுள்ளது. 

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பிற மாநில மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை முற்றிலும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுத் தெரிவித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai HC order to TN govt prevent other state medical westage dumping in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->