மதுரையில் பேய் மழை! போர்க்கால நடவடிக்கை எடுங்க - முதல்வருக்கு சு. வெங்கடேசன் அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


மதுரையில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் பெருக்கெடுத்து மழை நீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்க ஆளாகி உள்ளனர்.

குறிப்பாக கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

மேலும், வீடுகளை சூழ்ந்து தண்ணீர் குலம் போல் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 12 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை பெய்து வருவதால் மக்கள் கடுமையான அவதிக்கே ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை எம்பி சு வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவரின் செய்தி குறிப்பில், மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5cm மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

காலை 8.30-மாலை 5.30 இடைப்பட்ட 9மணி நேரத்தில் 9.8cm மழை பொழிந்துள்ளது.

பாதிப்பின் தீவிரத்தைத் தணிக்க போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்" என்ற தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai heavy rain issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->