புதுமணப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மது போதை கும்பல்! - Seithipunal
Seithipunal


சுற்றுலாவுக்கு வந்த திருமணமான புது தம்பதியை தாக்கி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்துக்கு உட்பட்ட திருமணமான புது தம்பதியர், கடந்த 21ஆம் தேதி பைரவ பாபா கோவிலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

அப்பொழுது அந்த பகுதியில் எட்டு பேர் மது அருந்தி மது அருந்திக் கொண்டிருந்தனர். அங்கு வந்த புதுமண தம்பதியை மது போதை கும்பல் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளது. 

பின்னர் கணவனை நான்கு பேர் கொண்ட கும்பல் பிடித்து வைத்துக்கொள்ள, பெண்ணை மட்டும் தனியாக அழைத்துச் சென்று, அந்த கும்பல் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

மேலும், இதனை வீடியோவாக எடுத்து கொண்ட அந்த கும்பல், இது குறித்து வெளியே தெரிவித்தால், காவல்துறையிடம் சென்றால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். 

மிரட்டல் காரணமாக தம்பதியினர் புகார் அளிக்காமல் இருந்த நிலையில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண் கடந்த 23ஆம் தேதி காவல் நிலையம் சென்று நடந்த விபரம் அனைத்தையும் தெரிவித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ரேவா மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh young lady gang abuse


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->