பஞ்சமி நிலம் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளக் கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை!
madurai high court ban on Panchami land related registration
பஞ்சமி நிலம் தொடர்பான எந்த ஒரு பத்திர பதிவுகளும் மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு தடை விதித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக தேவேந்திர இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் கணபதி குடும்பனார் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர் தாக்கல் செய்த மனுவில் "பட்டியல் இன மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த விவசாயம் செய்ய நிலம் வழங்கும் சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியில் 1892 இல் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 12 லட்சம் ஏக்க நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த நிலத்தை பட்டியலினம் அல்லாதவர்களுக்கு விற்கவோ அடமான வைக்கவோ முடியாது.
![](https://img.seithipunal.com/media/IMG_20221119_080309-vka5f.jpg)
இந்த நிலையில் பட்டியலினம், பழங்குடியினர் அல்லாத இதர சமூகத்தினர் பெயர்களில் பஞ்சமி நிலம் தற்பொழுது சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. இதை அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலத்தை அடையாளம் கண்டு மீண்டும் உண்மையான பயணங்கள் அல்லது அவர்களின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு வழங்க 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு பட்டியலை நிறுத்தவரிடம் ஒப்படைக்க மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க சட்டம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறு எந்த சட்டமும் இயற்றப்படவில்லை.
![](https://img.seithipunal.com/media/IMG_20221119_080259-vka5f.jpg)
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், பழனி தாலுகாவிற்கு உட்பட்ட சில இடங்களில் பட்டியல் இனத்தவர் அல்லாத இதர சமூகத்தினர் பெயர்களில் பஞ்சமி நிலம் சட்டவிரோதமாக விற்கப்பட்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நிலப்பதிவினை ரத்து செய்து சம்பந்தப்பட்ட வருவாய் பதிவு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் "பஞ்சமி நிலம் தொடர்பான பத்திர பதிவுகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது. தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையை செயலாளர், வருவாய் துறை செயலாளர், ஆதிதிராவிட நலத்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. மேலும் நான்கு வாரங்களுக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது" என உத்தரவிட்டு உள்ளனர்.
English Summary
madurai high court ban on Panchami land related registration